கும்பலாக ஓட்டு கேட்கும் வேட்பாளர்களுக்கு வேட்டு வைக்க கொரோனா தயார்..! முககவசம் – சமூக இடைவெளி அவசியம்
தமிழகத்தில் ஒரே வாரத்தில் 10 மடங்கு கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதிகரிக்கும் கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வழிமுறை கூறுகின்றது இந்த செய்தி தொகுப்பு
கொரோனா இருக்கா ? இல்லையா..? என்று ஒரு பக்கம் நம்மவர்கள் விவாதித்துக் கொண்டிருக்க தமிழகத்தில் கடந்த ஒருவார காலத்தில் கொரோனா பரவலின் வேகம் 10 மடங்கு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த் 14 ந்தேதி 759 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது, 4 பேர் பலியான நிலையில் 547 பேர் குணமடைந்து வீடுதிரும்பினர் அடுத்த நான்கு நாட்களில் 17ந்தேதி பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 945 ஆக உயர்ந்தது, பலி எணிக்கை 8 ஐ தொட்டது, 576 பேர் குணமடைந்து வீடுதிரும்பினர்.
18ந்தேதி மட்டும் ஒரே நாளில் 9 பேர் கொரோனாவுக்கு பலியாயினர். 19 ந்தேதி ஒரே நாளில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1087ஐ தொட்டது. 20ந்தேதி ஒரே நாளில் 1243 பேர் பதிப்புக்குள்ளான நிலையில் குணமடைந்தோர் எண்ணிக்கை பாதிக்கு பாதியாக குறைந்தது. 21ந்தேதி வரை கடந்த ஒரு வார காலத்தில் மொத்தமாக 8015 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்ட நிலையில் 51 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 4718 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.
மக்கள் மீண்டும் கைகளை சானிடைசர் மற்றும் சோப்பு கொண்டு கழுவுதல், கட்டாயம் முககவசம் அணிதல், கூட்டமான இடங்களுக்கு செல்லுவதை தவிர்த்தல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை கடைபிடித்தல் அவசியமாகின்றது என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
ஊரடங்கு அறிவிப்பு வந்து அடங்கி இருப்பதை விட நாமே முன் எச்சரிக்கையுடன் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்தால் தமிழகத்தில் கொரோனா பரவலின் வேகமும் குறையும், ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளும் மீண்டும் வராது என்றும் சுகாதாரதுறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதே நேரத்தில் தேர்தல் காலம் என்பதால் தொண்டர்களுடன் கும்பலாக சேர்ந்து வீதி வீதியா சுற்றிதிரிந்து கொரோனா பரவலுக்கு வித்திடாமல், தேவையானவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு, குறைந்த அளவு தொண்டர்களுடன் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொண்டர்களை அழைத்துச்சென்றால் தேர்தலை மட்டுமல்ல கொரோனாவையும் வெற்றிகொள்ளலாம்..!
முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாமல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொரோனா சமூக பரவலுக்கு காரணமாக இருந்தால் ஓட்டு கிடைக்கிறதோ இல்லையோ, கொரோனா உடல் நலத்திற்கு வேட்டு வைக்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும்..!
Comments