தமிழகத்தில் மொத்தம் 4512 வேட்பு மனுக்கள் ஏற்பு, 2743 வேட்பு மனுக்கள் தள்ளுபடி, ரூ.231.63 கோடி மதிப்பில் பணம், பொருட்கள் பறிமுதல்: சத்ய பிரதா சாஹு

0 3034
தமிழகத்தில் மொத்தம் 4512 வேட்பு மனுக்கள் ஏற்பு, 2743 வேட்பு மனுக்கள் தள்ளுபடி, ரூ.231.63 கோடி மதிப்பில் பணம், பொருட்கள் பறிமுதல்: சத்ய பிரதா சாஹு

 

மிழகத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 12 லட்சத்து 87 ஆயிரம் பேர் உள்ள நிலையில், தபால் வாக்களிக்க 1 லட்சத்து 95 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுவரை தேர்தல் பறக்கும் படையினரால்,  231 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பில் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சி விஜில் செயலி மூலம் ஆயிரத்து 971 புகார்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, அதில் ஆயிரத்து 368 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சத்யபிரதா சாஹூ கூறினார்.

தமிழகத்தில் 6 கோடியே 29 லட்சத்து 43 ஆயிரம் வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகவும், தேர்தல் நாளன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments