சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 40 பேருக்கு கொரோனா

0 66320
சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 40 பேருக்கு கொரோனா

 

சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்த ஆண்டில் சென்னையில் ஒரே நிறுனத்தில் அதிகமான தொற்று கண்டறியப்பட்டது இதுவே முதல்முறையாகும். ஏ.ஜி.எஸ். என்ற மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் நிறுவனத்தின் கிளைகள் கந்தன்சாவடி, தரமணி, பெருங்குடி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன், இங்கு பணிபுரியும் ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, அலுவலகத்தில் பணிபுரியும் சுமார் 200-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், 40 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கொரோனா பரவியதை அடுத்து, அந்நிறுவனம் தற்காலிகமாக மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments