கொரோனா தடுப்பூசி போட்டால் 56 நாட்கள் ரத்த தானம் செய்யக்கூடாது: தேசிய ரத்த பரிமாற்ற கவுன்சில்
கொரோனா தடுப்பூசி போட்டால் 56 நாட்கள் ரத்த தானம் செய்ய கூடாது என்று தேசிய ரத்த பரிமாற்ற கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.
கவுன்சிலின்இயக்குனர் சுனில் குப்தா வெளியிட்டுள்ள உத்தரவில், கொரோனாவுக்கு எதிரான எந்தவொரு தடுப்பூசி டோஸ் எடுத்துக்கொண்டாலும், கடைசியாக போட்ட தடுப்பூசி டோசுக்கு பின்னர் 28 நாட்களுக்கு ரத்த தானம் செய்யக்கூடாது என்றார்.
முதல் டோஸ் போட்டு 28 நாட்கள் கழித்து 2வது டோஸ் போடப்பட வேண்டும் என்பதால் மொத்தம் 56 நாட்களுக்கு ரத்த தானம் செய்யக்கூடாது என்றார்.
Comments