அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குத் தொடர்ந்தாலும் விசாரணை நடக்கும் - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

0 2533
கேரள தங்கக்கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது காவல்துறையினர் வழக்குத் தொடர்ந்தாலும் தொடர்ந்து விசாரணை நடக்கும் என மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

கேரள தங்கக்கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது காவல்துறையினர் வழக்குத் தொடர்ந்தாலும் தொடர்ந்து விசாரணை நடக்கும் என மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது கேரள போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது கவலையை ஏற்படுத்துவதாகவும், மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றால் சுதந்திரமான விசாரணைக்கு முதலமைச்சர் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

கேரளாவில் ஏராளமான இளைஞர்கள் வேலை தேடி நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் மத்திய அமைச்சர் குற்றம் சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments