இந்திய- சீன ராணுவ கமாண்டர்கள் படைகளை விலக்கிக் கொள்வது குறித்து இந்த வாரத்தில் பேச்சுவார்த்தை
இந்திய- சீன ராணுவக் கமாண்டர்கள் மீண்டும் இந்த வாரம் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
லடாக் மோதலுக்குப் பின்னர் இருதரப்பு அதிகாரிகளும் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் பாங்கோங் ஏரி, டெப்சாங் பள்ளத்தாக்கில் இருக்கும் படைகளை விலக்கிக் கொள்வது குறித்து அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் இரு தரப்பு கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நடப்பு வாரத்தில் நடக்க வாய்ப்புள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
Comments