அமைச்சரை நோக்கி வீசப்பட்ட சரவெடி..! அமமுகவினர் அலப்பறை

0 5167
அமைச்சரை நோக்கி வீசப்பட்ட சரவெடி..! அமமுகவினர் அலப்பறை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ சென்ற கார் மீது பட்டாசு வீசி வெடிக்கச் செய்ததாக அ.ம.மு.க.வினர் மீது புகார் எழுந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள அதிமுக மற்றும் அமமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

இரு கட்சியினரும் அருகருகே திரண்டிருந்ததால் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. அப்போது, அ.ம.மு.க. வேட்பாளர் தினகரன் வருகை தருவதாக தகவல் கிடைத்ததும், அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு தனது காரில் ஏறி புறப்பட்டார்.

அமைச்சரின் கார் மந்தித்தோப்பு சாலையில் வந்த போது அவரது கார் மீது மர்ம கும்பல் ஒன்று சரவெடியை கொளுத்திப் போட்டது.

அந்த பட்டாசு அமைச்சரின் கார் அருகில் விழுந்து சரமாரியாக வெடித்தது. அமைச்சரின் கார் ஓட்டுனர் சாமர்த்தியமாக காரை முன் கூட்டியே நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

இருந்தாலும் அமைச்சர் கார் அருகில் நின்றிருந்த ஊடகத்தினர் மற்றும் கட்சியினர் சிலருக்கு பட்டாசு வெடித்ததில் காயம் ஏற்பட்டது. இரு கட்சியினரும் அங்கு திரண்டதால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க போலீசார் கூட்டத்தை கலைத்து அமைச்சரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். அமமுகவினர் பட்டாசு வெடித்ததில் தனது கார் தீப்பிடித்திருந்தால் உயிருக்கே ஆபத்தாகியிருக்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments