கொரோனா தடுப்பூசியில் பன்றி புரதம் கிடையாது - ஆஸ்ட்ராஜெனகா விளக்கம்

0 3657
கொரோனா தடுப்பூசியில் பன்றி புரதம் கிடையாது - ஆஸ்ட்ராஜெனகா

தங்களது கொரோனா தடுப்பூசியில் பன்றியின் புரதப்பொருள் எதுவும் சேர்க்கப்படவில்லை என ஆஸ்ட்ராஜெனகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாராகி பல நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதனிடையே, இந்த தடுப்பூசியில் பன்றியின் கணையத்தில் இருந்து எடுக்கப்பட்ட டிரிப்சின் (trypsin) என்ற புரதப் பொருள் சேர்க்கப்பட்டுள்ளதால், தடுப்பூசி ஹராம் என்றும் அதை இஸ்லாமியர்கள் போட்டுக் கொள்ளக்கூடாது என இந்தோனேசிய உலமாக்கள் கவுன்சில்  தனது இணையதளத்தில் கூறியிருந்தது.

அதேநேரம் மிகவும் அவசரமான காலகட்டத்தில் இந்த தடுப்பூசியை போடுவதில் தவறில்லை எனவும் கவுன்சில் கூறியிருந்த நிலையில், ஆஸ்ட்ராஜெனகா இந்த விளக்கத்தை வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments