12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் குறித்து விரைவில் முடிவு - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

0 9594
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் குறித்து விரைவில் முடிவு - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

12- வது வகுப்பு மாணவர்களுக்கும் ஆல் பாஸ் வழங்குவது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் போடி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ஓ. பன்னீர் செல்வம், தமக்கு ஆதரவாக சீலையம்பட்டியில் தீவிர வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார். சீலையம்பட்டியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய ஓ.பன்னீர் செலவம், ஆல் பாஸ் தொடர்பாக தமிழக மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக சுட்டிக் காட்டினார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை உருவாகும் பணி, விரைவில் தொடங்கும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் உறுதிஅளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments