லஞ்ச புகாருக்கு ஆளான மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர்: ஆளும் சிவசேனா கூட்டணி அரசில் குழப்பம்
மகாராஷ்டிராவில் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான லஞ்ச குற்றச்சாட்டை அடுத்து ஆளும் சிவசேனா கூட்டணி அரசில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் அதிபர் அம்பானி வீட்டுக்கு அருகே வெடிகுண்டு கார் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில், பணியில் இருந்து தவறியதாக மகாராஷ்டிர டிஜிபி பரம் பீர் சிங் இடமாற்றம் செய்யப்பட்டார். அவர், போகிற போக்கில், வழக்குடன் தொடர்புடைய காவல் உதவி துணை ஆய்வாளர் சச்சின் வாசிடம், மாதந்தோறும் 100 கோடி வசூலித்து தருமாறு உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் உத்தரவிட்டார் என்ற குற்றச்சாட்டை வெளியிட்டார்.
இதை அடுத்து அனில் தேஷ்முக் ராஜினாமா செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Comments