சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - மெல்ல நிரம்பும் கொரோனா வார்டு

0 5361
சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - மெல்ல நிரம்பும் கொரோனா வார்டு

சென்னையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் உள்ள படுக்கைகள் மெல்ல நிரம்ப தொடங்கியுள்ளன. 

தமிழகத்தில் சற்றே தணிந்திருந்த கொரோனா பாதிப்பு கடந்த 10 ஆம் தேதி முதல் மீண்டும் அதிகரித்துவருகிறது. குறிப்பாக சென்னையில் தினமும் 400க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுவதால், அரசு மருத்துவமனை கொரோனா வார்டு நிரம்ப தொடங்கியுள்ளது.

கிண்டி கிங் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் உள்ள 750  படுக்கைகளில் 460 நோயாளிகளும்,  ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள 750  படுக்கைகளில் 300 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments