அமெரிக்காவில் இரவுநேர ஊரடங்கை மீறி கடற்கரையில் குவிந்த மக்கள்: விரட்டியடித்த போலீசார்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி கடற்கரையில் திரண்ட பொதுமக்களை காவல்துறையினர் விரட்டியடித்தனர்.
கொரோனா பரவல் அதிகரித்துவருவதால் மியாமி நகரில் 3 நாட்களுக்கு இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அடைக்கப்பட்டன.
இந்த சூழலில் வார இறுதி நாளையொட்டி மியாமி கடற்கரையில் மக்கள் திரண்டனர். தடையை மீறி குவிந்த பொதுமக்களை போலீசார் விரட்டியடிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
Comments