மதுரை - திருநெல்வேலி வழித்தடத்தில் 6 விரைவு ரயில்கள் ரத்து

0 51507

மதுரை - திருநெல்வேலி பிரிவில் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அந்த வழியாகச் செல்ல வேண்டிய 6 ரயில்கள் முழுமையாகவும், 14 ரயில்கள் பகுதியளவும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி விரைவு ரயில்கள் இன்று முதல் மார்ச் 30 வரை ரத்து செய்யப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் விரைவு ரயில்கள் மார்ச் 25, 26 ஆகிய நாட்களும், தாம்பரம் - நாகர்கோவில் விரைவு ரயில்கள் மார்ச் 29, 30 ஆகிய நாட்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

குருவாயூர் - சென்னை விரைவு ரயில்கள் மார்ச் 30 வரை திருநெல்வேலி - சென்னை இடையே ரத்து செய்யப்படுகிறது. கோவை - நாகர்கோவில், சென்னை -திருநெல்வேலி விரைவு ரயில்கள் மதுரைக்குத் தெற்கே ரத்து செய்யப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments