மத்திய அரசுடன் அதிமுக அரசு இணக்கமாக இருந்ததால் தமிழகத்திற்கு பயனில்லை என மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
திமுக ஆட்சிக்கு வந்ததும் அரசுப்பணிகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு 40 சதவீதம் ஆக உயர்த்தப்படும் என்றும் நெசவாளர்களுக்கென தனியாக கூட்டுறவு வங்கி அமைக்கப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.
உத்திரமேரூர் தொகுதி திமுக வேட்பாளர் க.சுந்தர், காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளர் சி.வி.எம்.பி எழிலரசன், மதுராந்தகம்தொகுதி ம.தி.மு.க வேட்பாளர் மல்லை சத்யா, செய்யூர் தொகுதி வி.சி.க வேட்பாளர் பனையூர் பாபு ஆகியோரை ஆதரித்து காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
வேளாண் சட்டங்களை முதலில் ஆதரித்த அதிமுக, தற்போது அந்த சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லாமல் பாதுகாப்போம் என தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது ஏன் என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
மத்திய அரசுடன், அதிமுக அரசு இணக்கமாக இருந்ததால், தமிழகத்திற்கு எந்த பயனும் ஏற்படவில்லை என திமுக தலைவர் குற்றம்சாட்டினார்.
திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்த மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும் என்பது கண் கூடாகத் தெரிகிறது என்று மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.
Comments