ரயில் பயணம் மேற்கொள்ளும் பெண்களின் பாதுகாப்புக்காக வழிகாட்டல் விதிகளை வெளியிட்டது ரயில்வே அமைச்சகம்

0 2527
ரயில் பயணம் மேற்கொள்ளும் பெண்களின் பாதுகாப்புக்காக வழிகாட்டல் விதிகளை வெளியிட்டது ரயில்வே அமைச்சகம்

ரயில் பயணம் மேற்கொள்ளும் பெண்களின் பாதுகாப்புக்காக வழிகாட்டல் விதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க இவற்றை தவறாமல் கடைபிடிக்க அனைத்து மண்டலங்களுக்கும் ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

குறுகிய காலத் திட்டத்தின்படி ரயில்வே அதிகாரிகள் அடிக்கடி ரோந்துப் பணி மேற்கொள்ள வேண்டும். நீண்ட காலத் திட்டத்தின் படி ரயில்வேயின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்.

கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல்,இருட்டான பகுதிகளில் மின்விளக்குகள் பொருத்துதல் போன்றவை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களைச் சுற்றியுள்ள பார்க்கிங், யார்டுகள், இணைப்புச் சாலைகள். பிளாட்பாரத்தின் முடிவுப் பகுதிகள் போன்ற அனைத்து இடங்களிலும் விளக்குகளைப் பொருத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments