இந்தியா-பாக்.எல்லையில் உள்ள கிராமங்களில் டிரோன்கள் பறக்கத் தடை
இந்தியா பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள கிராமங்களில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநில எல்லைப்பகுதியான பதான் கோட் மாவட்டத்திலும் சர்வதேச எல்லையருகே உள்ள கிராமங்களிலும் டிரோன் பறக்க தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அண்மைக்காலங்களில் பாகிஸ்தானில் இருந்து உளவு பார்க்கும் டிரோன் விமானங்கள் இப்பகுதிக்குள் ஊடுருவியுள்ளன. தீவிரவாதிகளுக்கு டிரோன் விமானங்கள் மூலமாக ஆயுதங்களையும் பாகிஸ்தான் உளவுத்துறை அனுப்பி வைக்கிறது. இதனால் சுமார் 25 கிலோ மீட்டர் பரப்பில் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி பறந்து வரும் டிரோன் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படும் என்று எல்லைப் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்
Comments