ஆட்சியில் இருந்தாலும், இல்லா விட்டாலும் எந்தச் சூழ்நிலையிலும் மக்களுக்காக குரல் கொடுப்பேன் - தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் உறுதி

0 3617
ஆட்சியில் இருந்தாலும், இல்லா விட்டாலும் எந்தச் சூழ்நிலையிலும் மக்களுக்காக குரல் கொடுப்பேன் - தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் உறுதி

ட்சியில் இருந்தாலும், இல்லா விட்டாலும் எந்தச் சூழ்நிலையிலும் மக்களுக்காக குரல் கொடுப்பேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது, மக்கள் கூட்டத்தை பார்க்கும்போது 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், முதலமைச்சரையும், அமைச்சர்களையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்ட அதே நேரத்தில் அறிவிக்கப்பட்ட மற்ற 15 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான  பணிகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்ட ஸ்டாலின், மற்ற மாநிலங்களில் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் மதுரையில் மட்டும் எய்ம்ஸ் அமைக்க ஏன் ஜப்பான் நிதி நிறுவனத்திடம் நிதி கோரப்பட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் ஏற்படுத்தப்படும் என்றும், நெல் குவிண்டாலுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் கொள்முதல் விலை வழங்கப்படும் எனவும், ஒரு டன் கரும்புக்கு 4 ஆயிரம் ரூபாய் ஆதார விலை வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

முன்னதாக திருநெல்வேலி,கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் ஸ்டாலின் ஆதரவு திரட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments