ஜப்பானில் நிலநடுக்கத்தால் விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது

0 2172

ஜப்பானில் 7 புள்ளி 2 ரிக்டர் அளவில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் முதலில் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் மியாகி மண்டலத்தில் உள்ளூர் நேரப்படி மாலை 6 மணி 9 நிமிடத்துக்கு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலப்பகுதியை ஒட்டிப் பசிபிக் பெருங்கடலின் கீழ் 60 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அந்நாட்டின் புவியியல் ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளி 2 ஆகப் பதிவாகியுள்ள நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் எழும் என முதலில் எச்சரிக்கை விடுத்துப் பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments