இதுக்கு தான் வாசிங்மிஷின் வழங்குகிறோம்..! அன்புமணி சொன்ன கணக்கு

0 6767
இதுக்கு தான் வாசிங்மிஷின் வழங்குகிறோம்..! அன்புமணி சொன்ன கணக்கு

தண்ணீர் பற்றாக்குறையை தடுக்கவே வாசிங்மிஷின் வழங்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அன்புமணிராமதாஸ் கூறினார்.

வாசிங் மெஷின் மூலம் துணிதுவைத்தால் தண்ணீரை மிச்சப்படுத்தலாம் என அன்புமணி சொல்லித்தந்த கணக்கு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

சென்னை சைதாப்பேட்டையில் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், உலக வெப்பமயமாதலால் நிகழும் தண்ணீர் பற்றாக்குறையை தடுக்கவே வாசிங்மிஷின் வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்

அத்தோடில்லாமல் சாதாரணமாக துணிதுவைப்பதற்கு 100 லிட்டர் தண்ணீர் தேவை என்றால் வாசிங்மிஷின் மூலம் துணி துவைத்தால் 10 லிட்டர் தண்ணீர் போதும் என்று சிறிய கணக்கு மூலம் தங்கள் தொண்டர்களுக்கு புரியவைத்தார்

தங்களுக்கு பதவி ஆசை இல்லை என்றும் ஆசை இருந்திருந்தால் வேறுமாதிரி இருந்திருப்போம் என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments