ஜெயலலிதா மரணம் தொடர்பாக மு.க.ஸ்டாலின், உதயநிதி பேசத் தடை விதிக்க வேண்டும்: அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு

0 4291
ஜெயலலிதா மரணம் தொடர்பாக மு.க.ஸ்டாலின், உதயநிதி பேசத் தடை விதிக்க வேண்டும்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஆகியோர் ஜெயலலிதா மரணம் தொடர்பாகப் பேசுவதற்குத் தடை விதிக்கக் கோரித் தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இருவரும் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக, மறைந்த தலைவர்களின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசி வருவதாக  மனுவில் குறிப்பிட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆணையம் விசாரித்து வரும் நிலையில் அதை விமர்சிக்கும் வகையில் இருவரும் பேசி வருவதால் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments