ஜப்பானில் ஏற்பட்ட வலுவான நிலநடுக்கம் காரணமாக கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை!

0 2934
ஜப்பானில் ஏற்பட்ட வலுவான நிலநடுக்கம் காரணமாக கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை!

ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் 7 புள்ளி 2 ரிக்டர் அளவில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அந்நாட்டின் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் மியாகி மண்டலத்தில் உள்ளூர் நேரப்படி மாலை 6 மணி 9 நிமிடத்துக்கு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலப்பகுதியை ஒட்டிப் பசிபிக் பெருங்கடலின் கீழ் 60 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் புவியியல் ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளி 2 ஆகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தின் காரணமாகக் கடலோரப் பகுதிகளில் வழக்கத்தைவிட ஒரு மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும்பக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments