அமெரிக்காவில் கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து முக கவசங்களை எரித்து போராட்டம்
ஒருபுறம் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில், அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து ஒரு குழுவினர் முககவசங்களை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரிசோனா மாநில தலைநகரான ஃபோனிக்சில் சுகாதார அலுவலகம் ஒன்றின் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஊரடங்கு உத்தரவுகளை எதிர்த்தும், தடுப்பூசி மீதான நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தவும் முக கவசங்களை எரித்ததாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். அமெரிக்காவில் கொரோனா கட்டுப்பாடுகளை வைத்து அரசியல் செய்யும் நிலை உள்ளது.
கட்டுப்பாடுகள் தேவையில்லை, கொரோனா வைரஸ் , ஒரு அற்புதம் நிகழ்வதை போல ஒழிந்து விடும் என முன்னாள் அதிபர் டிரம்ப் கூறி வருகிறார்.
Comments