உலகில் கடந்த 4 வாரங்களாக கொரோனா தொற்று அதிகரிக்கிறது -உலக சுகாதார நிறுவனம்
2021 ன் முதல் இரண்டு மாதங்களில் குறைந்திருந்த கொரோனா தொற்று கடந்த 4 வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது என உலக சுகாதார நிறுவன தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதோநோம் கெப்ரிசியஸ் கவலை தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் செய்தியாளர் சந்திப்பில் இதை தெரிவித்த அவர்,கொரோனா வைரஸ் எடுக்கும் மரபணு மாற்றங்களும், பல நாடுகளில் கட்டுப்பாடுகள் கைவிடப்பட்டதுமே இதற்கு காரணம் என கூறினார்.
சர்வதேச அளவில் போதிய தடுப்பூசி இல்லாததும் மற்றோர் காரணம் என அவர் தெரிவித்தார்.
உலக சுகாதார நிறுவன லேட்டஸ்ட் புள்ளிவிவரங்களின் படி, உலகில் 12 கோடியே 16 லட்சத்து 64 ஆயிரத்து 66 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டதில், 26 லட்சத்து 84 ஆயிரத்து 93 பேர் அதனால் உயிரிழந்தனர்.
Comments