சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ரயில் நிலையங்களில் நடைமேடைச் சீட்டுக் கட்டணம் உயர்வு
சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேடைச் சீட்டுக் கட்டணம் ஐம்பது ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ள போதும், நிலையத்துக்குள் பயணிகள் தவிரப் பிறர் செல்வதற்கான நடைமேடைச் சீட்டுகள் வழங்கப்படவில்லை.
முதியோர், நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள் ரயிலில் ஏறவும் இறங்கவும் பிறரின் உதவி தேவை என்பதால் நடைமேடைச் சீட்டுக்கள் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் சேலம் கோட்டத்தில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை நிலையங்களில் இன்றுமுதல் நடைமேடைச் சீட்டு வழங்கப்படுகிறது.
கொரோனா சூழலில் நெரிசலைத் தவிர்க்க நடைமேடைச் சீட்டுக் கட்டணம் ஐம்பது ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
Comments