சென்னை நேரு விளையாட்டரங்கில் ஒரே நாளில் 2000 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம்
சென்னை மாநகராட்சி சார்பில் நேரு உள்விளையாட்டரங்கில் ஒரேநாளில் இரண்டாயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் தொடங்கியுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் மாநகர சுகாதார நிலையங்கள், மினி கிளினிக்குகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று வரை 4 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேரு உள்விளையாட்டரங்கில் இன்று ஒரேநாளில் இரண்டாயிரம் பேருக்குத் தடுப்பூசி போடும் முகாம் நடைபெறுகிறது.
மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் 60 வயதுக்கு மேற்பட்டோர், பிற நோயுள்ள 45 வயதுக்கு மேற்பட்டோர் அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டையைக் கொண்டுவந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமைச் சனிக்கிழமைதோறும் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
Comments