' திமுகவை தோற்கடிக்கும் எண்ணம் இல்லை ; அதிமுகவை வெற்றி பெற வைக்க வேண்டும் ! '- கார்த்திக் திடீர் பேட்டி

0 9621

அ.தி.மு.க கூட்டணியில் இரண்டு சீட்டுகள் தருவதாக கூறினார்கள். ஆனால், இரண்டு சீட்டுகளை கொண்டு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்பதால் ஏற்றுக் கொள்ளவில்லை என்று மனித உரிமை காக்கும் கட்சித் தலைவர் கார்த்திக் கூறியுள்ளார்.

தேர்தல் களம் சூடு பிடித்து கொண்டிருக்கையில் நடிகர் கார்திக் தொடங்கிய மனித உரிமை காக்கும் கட்சி அமைதி காத்து வந்தது. சமத்துவ மக்கள் கட்சி தொகுதிகளுக்காக போராடிக் கொண்டிருக்கையில் நடிகர் கார்த்திக் தரப்பிலிருந்து எந்த சத்தத்தையும் காணோம். ஒரு வேளை கட்சியை கலைத்து விட்டார்களோ என்ற எண்ணமே மேலோங்கியது. இந்த நிலையில்தான், சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த மனித உரிமை காக்கும் கட்சியின் தலைவர் கார்த்திக் சந்தித்தார். அப்போது ஆவர் கூறுகையில், '' மனித உரிமை காக்கும் கட்சியின் தேர்தல் அறிக்கை இரண்டு நாட்களில் வெளியாகும் . எங்களது தேர்தல் அறிக்கையை கூட்டணி கட்சி என்ற முறையில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரிடம் அளித்து விடுவோம்.

முதலமைச்சர் மற்றும் துணை முதல்வரை சந்திக்கும் வரை மற்ற கட்சிகளோடு பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டிருந்தேன் என பேசிய அவர் அதிமுகவில் 2 இடங்கள் வரை தருகிறோம் என கூறினார்கள்.நான் பேசிய ஒரே பேரம் மக்கள் நலன் என தெரிவித்தார். நான் கூறிய மக்கள் நலன் குறித்த கருத்துகளை அ.தி.மு.க ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால், எனது ஆதரவு அ.தி.மு.கவுக்கு அளித்துள்ளேன். மற்ற கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையை 2009-ம் ஆண்டே எங்கள் கட்சியின் சார்பில் வெளியிட்டுள்ளோம் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இல்லை ஆனால், அதிமுகவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற எண்ணம்தான் உள்ளது.

என்னால் எந்தெந்த பகுதிகளுக்கு பிரசாரத்துக்கு செல்ல முடியுமோ அங்கெல்லாம் சென்று தேர்தல் பிரசாரம் செய்வேன். கூட்டணியில் இணைவதற்காகவும், பிரசாரம் செய்வதற்காகவும் எந்த கட்சியிடமும் பணம் பெறவில்லை. இனிமேலும் பணம் பெற மாட்டேன். பாரதிய ஜனதா கட்சியில் சேர எனக்கு அழைப்பு வந்தது உண்மைதான். ஆனால் எனக்கென்று தனி கட்சி இருக்கிறது. அதற்கென்று தனி கொள்கை இருக்கிறது. அப்படியிருக்கையில், நான் எப்படி பாரதிய ஜனதா கட்சியில் சேர முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments