பாஸ்பரஸ் குத்துச் சண்டை போட்டியில் உலகச் சாம்பியனை வீழ்த்தி அரையிறுதிக்கு இந்திய வீராங்கனை தகுதி
இஸ்தான்புல்லில் நடைபெற்று வரும் பாஸ்பரஸ் குத்துச் சண்டை போட்டியின் காலிறுதியில் உலக சாம்பியனை வீழ்த்தி, இந்திய வீராங்கனை நிகாத் ஷரீன் அரையிறுதிக்கு முன்னேறினார்.
51 கிலோ எடைப்பிரிவின் காலிறுதிப் போட்டியில் இரண்டு முறை உலகச்சாம்பியனான கஜகஸ்தானின் நாசீம் கைசைபேயை அவர் எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 4-1 என்ற கணக்கில் நிகாத் ஷரீன்வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியதுடன்,வெண்கலப்பதக்கத்தையும் உறுதி செய்திருக்கிறார்
Comments