ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி அரைஇறுதிக்கு சிந்து முன்னேற்றம்

0 2627
ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் அரைஇறுதி சுற்றுக்கு இந்திய வீராங்னை சிந்து முன்னேறி உள்ளார்.

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் அரைஇறுதி சுற்றுக்கு இந்திய வீராங்னை சிந்து முன்னேறி உள்ளார்.

பர்மிங்காம் நகரில் நடந்து வரும் ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டியின் கால்இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனையும் 2019-ஆம் ஆண்டிற்கான உலக சாம்பியனுமான சிந்து, முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ஜப்பானை சேர்ந்த அகனே யமகுச்சியை எதிர்கொண்டார்.

ஒரு மணி நேரம் 16 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தின் இறுதியில் சிந்து 16-க்கு 21, 21-க்கு 16, 21-க்கு 19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் இந்திய இளம் வீரர் லக்சயா சென் 17க்கு 21, 21-க்கு 16, 17-க்கு 21 என்ற செட் கணக்கில் நெதர்லாந்து வீரர் மார்க் கால்ஜோவிடம் தோல்வியை சந்தித்து தொடரை விட்டு வெளியேறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments