ஸ்வப்னாவை கட்டாயப்படுத்தி முதலமைச்சருக்கு எதிராக வாக்குமூலம் பெறுவதாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் மீது கேரள அரசு வழக்கு
கேரள அரசு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது.
தங்கக் கடத்தல் வழக்கை விசாரித்து வரும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சபாநாயகர், முதலமைச்சர் மீது பழிசுமத்த முயற்சிப்பதன் பின்னணியில் பாஜகவின் அரசியல்ரீதியான தூண்டுதல் இருப்பதாக கூறும் போலீசார் இவ்வழக்கில் முதன்மைக் குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷை முதலமைச்சருக்கு எதிராக வாக்குமூலம் அளிக்கும்படி அமலாக்கத்துறை கட்டாயப்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளது.
இப்பிரச்சினையை சட்டரீதியாக சந்திக்கத் தயார் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஸ்வப்னாவின் வாக்குமூலத்தை முதலில் பதிவு செய்தது கேரள போலீசார்தான் என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
Comments