மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராக மாநில அரசுகளின் தீர்மானம் தவறில்லை -உச்சநீதிமன்றம்
மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராக மாநில அரசுகள் தீர்மானம் நிறைவேற்றுவதில் தவறில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வேளாண் மற்றும் குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவைகளில் இயற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், இவை வெறும் அபிப்ராயங்கள்தானே என்று கூறியுள்ளது.
மக்கள் இந்த சட்டத்தை மதிக்க வேண்டாம் என்று மாநில அரசுகள் கூறவில்லை என்றும், சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் உச்சநீதிமன்ற அமர்வு விளக்கம் அளித்துள்ளது.
மத்திய வரம்புக்குட்பட்ட சட்டங்களை மாநில அரசுகள் இயற்ற முடியாததால் கருத்துக்களை இவ்வாறு வெளிப்படுத்துவதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Comments