மக்களுக்கு நன்மை தரும் திட்டங்களை தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ளது அதிமுக - ராமதாஸ் பாராட்டு

0 2031
மக்களுக்கு நன்மை தரும் திட்டங்களை தேர்தல் வாக்குறுதியாக அதிமுக அளித்துள்ளதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு நன்மை தரும் திட்டங்களை தேர்தல் வாக்குறுதியாக அதிமுக அளித்துள்ளதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். 

வந்தவாசி தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் முரளிசங்கரை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தெள்ளார் என்ற இடத்தில் காரில் இருந்தவாரே பிரச்சாரம் மேற்கொண்டார். சுமார் ஓராண்டுக்குப் பின் மக்களை நேரில் சந்தித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், பாமக வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இலவசமாக வாஷிங்மெஷின், வருடத்திற்கு 6 சிலிண்டர் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அதிமுக அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய ராமதாஸ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை மிஞ்ச தமிழகத்தில் எந்த சக்தியும் இல்லை என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சார வீயூகத்திற்காக, தனியார் நிறுவனத்தை நாடியதாக திமுகவை ராமதாஸ் கடுமையாக விமர்சித்தார்.

திமுக ஆட்சிக்கு வர வாக்களித்தால், வரம் கொடுத்த சிவனின் தலையிலேயே அசுரன் கையை வைக்க முயன்ற கதையைப் போல் ஆகிவிடும் என்றும் ராமதாஸ் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments