புதுச்சேரியில் கொரோனா பரவல் எதிரொலி - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
புதுச்சேரியில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் எதிரொலியாக, ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை, மே 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு கொரோனா பரவலுக்குப் பிறகு பூட்டப்பட்ட புதுச்சேரி பள்ளிகள், கடந்த ஜனவரி மாதம் 18ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. இந்நிலையில், அண்மை நாட்களாக, கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியிருப்பதால், ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரையில், வரும் திங்கட்கிழமை முதல் மே மாதம் 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.
9 முதல் 12ஆம் வகுப்புகள் வரையில் தொடர்ந்து செயல்படும் என்றும், தேவைப்பட்டால் அந்த வகுப்புகளுக்கும் விடுமுறை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என தமிழிசை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments