மின் வாரியத்திற்கு ரூ.1.300 கோடி நிலக்கரி கொள்முதல் செய்யும் விவகாரம் : டெண்டருக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் மறுப்பு
தமிழக மின் வாரியத்திற்கு ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு தடை விதிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் மறுத்து விட்டது.
மின்வாரிய பொறியாளர் செல்வராஜ் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார். இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், பழைய ஆவணங்களை மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
வாதங்களை கேட்ட நீதிபதிகள், நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்து முறைகேட்டை நிரூபிக்கும் வகையில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு அவகாசம் வழங்கி, வழக்கு விசாரணையை 10 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
Comments