இனி எல்லாம் இப்படித்தான்..! ஆர்.கே நகர் தி.மு.க சவுண்டு
சென்னை ஆர்.கே நகரில் மசூதி ஒன்றில் தொழுகை முடிந்து வரும்பவர்களிடம் வாக்கு சேகரிப்பது தொடர்பாக திமுக மற்றும் மக்கள் நீதிமையம் கட்சியினடையே ஏற்பட்ட போட்டியால் வாக்குவாதம் ஏற்பட்டது.
சென்னை ஆர்.கே நகர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக களம் இறங்கியுள்ள எபினேசர் தனது ஆதரவாளர்களுடன், அங்குள்ள மசூதியில் தொழுகை முடிந்து வந்தவர்களிடம் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார்.
அந்த மசூதிக்கு இரண்டு வாசல் உள்ள நிலையில் இரண்டிலும் திமுகவினர் நின்று கொண்டு தங்கள் கட்சிக்கு வாக்கு சேகரித்தனர். அப்போது அங்கு வந்த மக்கள் நீதிமையம் வேட்பாளர் பைசலும் ஒரு பக்கம் நின்று வாக்கு சேகரிக்க தொடங்கினார்.
இதனை கண்ட திமுக தொண்டர் ஒருவர் இங்கே தாங்கள் மட்டும் தான் ஓட்டு கேட்க முடியும் என்று மக்கள் நீதி மய்யம் வேட்பாளரிடம் அதிகாரத்துடன் வம்புக்குச்சென்றார்
ஆனால் பொறுமையாக நடந்து கொண்ட பைசல் ஆளுக்கு ஒரு வாசலில் நிற்கலாம் என்று சொன்னபோது திமுகவினர் அதனை ஏற்காமல் தகராறு செய்தனர்
இரு கட்சியினருக்கும் முறையான அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் விட்டுக் கொடுத்துச் செல்லும் படி காவல்துறையினர் சமாதனப்படுத்தியும் திமுகவினர் ஏற்க மறுத்தனர்.
இதையடுத்து மக்கள் நீதிமையம் வேட்பாளர் பைசல் சற்று தள்ளி நின்று வாக்கு சேகரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
Comments