ஓட்டுக்கு பதிலாக மாஸ்க் போட சொன்ன வேட்பாளர்..! பாவம் அவரே மறந்துட்டாரு
அந்தியூர் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பின் போது ஓட்டு போடுங்கள் என்று கேட்பதற்கு பதிலாக மறந்து போய் மாஸ்க் போடுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அத்தோடு ஸ்டாலின் பேசியதை அப்படியே சொல்லி குழப்பிய வேட்பாளரின் வெயில் பிரச்சாரம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
பவானி தொகுதியில் அதிமுக வேட்பாளரான அமைச்சர் கருப்பண்ணனை எதிர்த்து திமுக வேட்பாளர் கே.பி.துரைராஜ் களம் இறங்கியுள்ளார். அவர் நெருஞ்சிப்பேட்டை பகுதியில் ஆதரவாளர்களுடன் சென்று வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது துரைராஜோ அல்லது அவருடன் சென்றிருந்த ஒருவர் கூட மாஸ்க் அணியவில்லை.!
அங்குள்ள கடை ஒன்றில் நின்றிருந்த பெண்களிடம் ஓட்டு கேட்கும்படி அவரது ஆதரவாளர் ஒருவர் சொல்ல ஒரு நொடி யோசித்த துரைராஜ், தான் மாஸ்க் அணியவில்லை என்பதை மறந்து, எல்லோரும் மாஸ்க் போடுங்க இல்லன்னா தடுப்பு ஊசியாவது போடுங்கன்னு சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.
அதன் பின்னர் பிரச்சார வேணில் ஏறி பேசிய அவர் தன்னை மு.க.ஸ்டாலின் என நினைத்து மெய்மறந்து பேசத்தொடங்கினார், மேமாதம் 25 ந்தேதி பதவி ஏற்புக்கு முன்மொழிந்து வழி மொழிந்து என்று குழப்பியதால் அருகில் நின்ற தொண்டர் வாய் பிழந்து பார்க்க, சற்று நேரத்தில் மீண்டும் சரியான ரூட்டை பிடித்து பேசி முடித்தார் வேட்பாளர் துரைராஜ்.
தினமும் பல இடங்களுக்கு சென்று பலருடன் கைகுலுக்கி, வீதி வீதியாக வந்து செல்லும் வேட்பாளர்களும், உடன் செல்பவர்களும் தான் முதலில் முககவசம் அணியவேண்டும் அதன் பின்னர் ஊராருக்கு புத்திச்சொல்லவேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஆதங்கம்..!
Comments