சென்னை மாநகராட்சி சார்பில் 2000 பேருக்கு நேரு உள்விளையாட்டரங்கில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

0 1246
சென்னை மாநகராட்சி சார்பில் 2000 பேருக்கு நேரு உள்விளையாட்டரங்கில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

சென்னை மாநகராட்சி சார்பில் இரண்டாயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நேரு உள் விளையாட்டரங்கில் நாளை நடைபெற உள்ளது.

மாநகராட்சியின் செய்திக் குறிப்பில், சென்னையில் 160 மாநகர சுகாதார மையங்கள், 36 மினி கிளினிக்குகளில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.

இதுவரை சென்னையில் 4 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 20 மருத்துவக் குழுக்கள் அமைத்து 2000 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடும் வகையில் நேரு உள்விளையாட்டரங்கில் நாளைக் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்த முகாமில் 60 வயதுக்கு மேற்பட்டோர், பிற நோயுள்ள 45 வயதுக்கு மேற்பட்டோர் அரசால் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையைக் கொண்டுவந்து கலந்து கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments