தமிழகத்தில் கொரோனா தடுப்பு விதிகளை மீறியோரிடம் இருந்து 14 கோடியே 59 லட்ச ரூபாய் அபராதம் வசூலிப்பு

0 4599
தமிழகத்தில் கொரோனா தடுப்பு விதிகளை மீறியோரிடம் இருந்து 14 கோடியே 59 லட்ச ரூபாய் அபராதமாகப் பெறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு விதிகளை மீறியோரிடம் இருந்து 14 கோடியே 59 லட்ச ரூபாய் அபராதமாகப் பெறப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்கச் சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட விதிகளைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விதிகளை மீறிய ஆட்கள், நிறுவனங்களுக்குப் பொதுச் சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்புகள் ஆகியன அபராதம் விதிக்கின்றன.

நேற்று ஒரேநாளில் மட்டும் மொத்தம் 8,525 பேரிடம் 18,34,150 ரூபாய் அபராதமாகப் பெறப்பட்டுள்ளது. நேற்று வரை மொத்தம் 14 கோடியே 59 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் அபராதம் பெறப்பட்டுள்ளது. அதிக அளவாகச் சென்னையில் 2 கோடியே 68 லட்சத்து 57 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் பெறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments