சோதனை செய்தல், தொடர்புகளைக் கண்டறிதல், தகுந்த சிகிச்சை அளித்தல் ஆகியவற்றால் கொரோனா 2ஆவது அலையை முறியடிக்கலாம் - இந்திய மருத்துவ சங்கம்

0 2657
சோதனை செய்தல், தொடர்புகளைக் கண்டறிதல், தகுந்த சிகிச்சை அளித்தல் ஆகியவற்றால் கொரோனா 2ஆவது அலையை முறியடிக்கலாம் - இந்திய மருத்துவ சங்கம்

சோதனை செய்தல், தொடர்புகளைக் கண்டறிதல், தகுந்த சிகிச்சை அளித்தல் ஆகியவற்றைப் பின்பற்றினால் கொரோனாவின் 2ஆவது அலையை முறியடிக்கலாம் என இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனிநபர் இடைவெளி, கைகளைக் கழுவுதல், முகக்கவசம் அணிதல் ஆகியவற்றின் மூலமும் கொரோனா பரவலைத் தடுக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளது.

சோதனையை அதிகப்படுத்தல், தொடர்புகளைக் கண்டறிதல், தகுந்த சிகிச்சை அளித்தல் ஆகிய நடைமுறையை அரசு, உள்ளாட்சி அமைப்புகள், பொதுமக்கள் இணைந்து நடைமுறைகளைப் பின்பற்றினால் கொரோனா இரண்டாவது அலையை முறியடிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

தகுதியுள்ள அனைவரும் விரைவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments