உதகை : சம்பளம் பிரிப்பதில் தகராறு... பழங்குடியின இசைக்கலைஞர் அடித்து கொலை!

0 2815
கொல்லப்பட்ட மணி

கோத்தகிரி அருகே சம்பளத் தொகையை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆதிவாசி இசைக்கலைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி குஞ்சப்பனை அருகேயுள்ள மந்தரை கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவர் இருளர் இனத்தைச் சேர்ந்தவர். அந்த பகுதியில் செயல்பட்டு வரும் இசைக்குழுவில் சேர்ந்து, பல ஊர்களில் நடைபெறும் விஷேச நிகழ்ச்சிகளுக்கு சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்துள்ளார். அரவேணு பகுதியில் நடந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தன் குழுவினருடன் சென்றுள்ளார். நிகழ்ச்சி முடிந்ததும், பணத்தை பெற்று கொண்டு ஊர் திரும்பியுள்ளனர். அப்போது, சம்பளத்தை பிரிப்பதில் குழுவினருக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு வகையாக சம்பளத்தை பிரித்து எடுத்து கொண்டு மணி , மந்தாரை ஆற்று பகுதியிலுள்ள தன் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது, மணியை பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் அவரை அடித்து கொன்றுள்ளனர். பின்னர், சடலத்தை அவர் அணிந்திருந்த வேட்டியிலேயே கட்டி மரத்தில்தொங்க விட்டு சென்றுள்ளனர். இசை நிகழ்ச்சிக்கு சென்றவர் நீண்ட நேரமாக வீடு திரும்பாததால், மணியின் குடும்பத்தினர் அவரை தேடியுள்ளனர். அப்போது, மரத்தில் மணியின் சடலம் தொங்கிக் கொண்டிருப்பதைக பார்த்து அதிர்ச்சியடைந்தனர். கோத்தகிரி போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு சென்று மணியின் உடல் மீட்டு  உடல் கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, மணி இடம் பெற்ற இசைக்குழுவில்  இடம் பெற்றிருந்த கலைஞர்களிடத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த குழுவில் இடம் பெற்ற ஒருவர் மட்டும் மாயமாகியுள்ளார். அவரின், செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால். இதனால், அவரை பிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments