மநீம பொருளாளர் ரூ.80 கோடிக்கு வருமானம் மறைத்தது கண்டுபிடிப்பு-வருமான வரித்துறை

0 4948

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளர் சந்திரசேகர் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில், 80 கோடி ரூபாய் அளவிற்கு வருமானத்தை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 17ஆம் தேதி திருப்பூர், தாராபுரம், சென்னையில் சந்திரசேகர் தொழில் குழுமம் தொடர்புடைய 8 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 11 கோடியே 50 லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், 80 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத வருமானமும் கண்டறியப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதாகவும் வருமான வரித்துறை கூறியுள்ளது.

கணக்கில் வராத ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதன் மூலம், தேர்தல் பணப்பட்டுவாடா செய்வதற்கான வாய்ப்பு குறைக்கப்பட்டுள்ளது என்றும், இது நேர்மையாகவும் சுதந்திரமாகவும் தேர்தலை நடத்த உதவும் என்றும் கூறியுள்ள வருமான வரித்துறை பணப்புழக்கம் தொடர்பான கண்காணிப்பை அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய மநீம தலைவர் கமல்ஹாசன், ஒரு தனிநபர் தொடர்பான ஐடி ரெய்டுக்கு, கட்சி பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என பதிலளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments