நந்திகிராமில் திரிணாமூல் காங்கிரஸ், பாஜகவினரிடையே 2 இடங்களில் மோதல்
மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் இரு வெவ்வேறு மோதல்களில் பாஜக, திரிணாமூல் தொண்டர்கள் 7 பேர் காயமடைந்தனர்.
திரிணாமூல் காங்கிரசில் இருந்து பாஜகவில் சேர்ந்த சுவேந்து அதிகாரி நந்திகிராமில் போட்டியிடுகிறார்.
நேற்றிரவு பெகுதியா என்னுமிடத்தில் வாக்குச் சேகரித்த திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் இருவரை பாஜகவினர் நூற்றுக்கு மேற்பட்டோர் சூழ்ந்துகொண்டு தாக்கியதுடன் அவர்களின் வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். இதில் இருவரும் படுகாயமடைந்தனர்.
சோனாச்சுரா என்னுமிடத்தில் வாக்குச் சேகரிக்கச் சென்ற பாஜகவினரைத் திரிணாமூல் தொண்டர்கள் தடுத்ததால் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பாஜகவினர் நால்வரும், திரிணாமூல் தொண்டர் ஒருவரும் காயமடைந்தனர்.
Comments