'அரியர் பசங்க நாங்க... எங்க சாய்ஸ் நீங்க'- முதல்வரை சிரிக்க வைத்த பதாகை

0 26212
அரியர் மாணவர்கள் அளித்த வரவேற்பு

கொரோனா பரவல் காரணமாக, கல்லூரி மாணவர்களின் அரியர்களை பாஸ் என்று அறிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி செலுத்தும் விதமாக எங்க சாய்ஸ் நீங்கதான் என்று பதாகை ஏந்தி மாணவர்கள் நின்றதை பார்த்து எடப்பாடி பழனிச்சாமி வாய்விட்டு சிரித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாகை மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டியில் பிரசாரத்தைத் தொடங்கினார் .அப்போது அவர் வேதாரண்யம், நாகை, பூம்புகார், மயிலாடுதுறை, சீர்காழி, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் தொகுதிகளில் இரட்டை இலைக்கு வாக்குகளைச் சேகரித்தார். நாகை நகரில் முக்கிய வீதிகளில் கடும் வெயிலில் முதல்வர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, திடீரென ஒரு கட்டடத்தில் மொட்டை மாடியில் பெரும் ஆரவாரத்துடன் சத்தம் கேட்டது. எடப்பாடி பழனிசாமி  சத்தம் வந்த திசையை நோக்கி எட்டி பார்த்தார்.

அங்கே 15 க்கும் மேற்பட்டவர்கள் பச்சை வண்ணத்தில் கையில் பதாகைகளை ஏந்தியபடி நின்றனர். பதாகைகளில் "எடப்பாடியார்" என்று மேல் வரிசையில் நின்ற மாணவர்கள் எழுதி வைத்திருந்தனர். அடுத்த வரிசையில் நின்ற இளைஞர்கள் "அரியர் பசங்க நாங்க எங்க ஓட்டு இரட்டை இலைக்கே" என்று எழுதப்பட்ட பதாகைகளை வைத்திருந்தனர். இதை பார்த்து மனம் நெகிழ்ந்த எடப்பாடி பழனிச்சாமி வாய் விட்டு சிரித்தார். அரியர் அச்சத்தில் இருந்த மாணவர்களின் வயிற்றில் பால் வார்த்த முதல்வருக்கு இளைஞர்கள் இப்படி வித்தியாசமான முறையில் நன்றி தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments