விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெஹூல் சோக்சியை இந்தியா அழைத்து வர நடவடிக்கை -நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
இந்திய வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து வெளிநாடுகளுக்குத் தப்பிச்சென்ற விஜய் மல்லையா, நீரவ்மோடி மற்றும் மெஹூல் சோக்சி ஆகியோர் விரைவில் இந்தியா அழைத்து வரப்பட்டு அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள விஜய் மல்லையாவையும், நீரவ் மோடியையும் அன்டிகுவாவில் உள்ள மெஹூல் சோக்சியையும் இந்தியா அழைத்து வருவதற்கான சட்டரீதியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் குறிப்பிட்டார்.
மூவரும் விரைவில் இந்தியா அழைத்து வரப்படுவார்கள் என்றும் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்தார்.
Comments