என்.சி.டி சட்டத்திருத்தம் ஜனநாயக அடிப்படையின் மீது நடத்தப்படும் துல்லியத் தாக்குதல்-மமதா பானர்ஜி
டெல்லியில் அமல்படுத்தப்பட உள்ள என்.சி.டி சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
துணை நிலை ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் தேசத் தலைநகர் பிரதேசத்தின் சட்டத்திருத்த மசோதாவான NCT க்கு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.
அவருக்கு ஆதரவு தெரிவித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அரசியல் அடிப்படை மீதான துல்லியத் தாக்குதல் என்றும், ஜனநாயக விரோதமான, அரசியல் சாசனத்திற்கு எதிரான இந்த சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments