சட்டம் - ஒழுங்கு பிரச்னை இல்லாத மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

0 2713
சட்டம் - ஒழுங்கு பிரச்னை இல்லாத மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சட்டம்-ஒழுங்கு பிரச்னை இல்லாத மாநிலங்களில் முதல் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்எல்ஏ பாண்டியனை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர், அ.தி.மு.க. அரசு உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி காவிரி உரிமைகளைப் பெற்றுத் தந்ததாகத் தெரிவித்தார்.

டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவித்து அதனையும் பாதுகாத்து தந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

சிதம்பரம் தொகுதியில் திட்டுக்காட்டூர் உயர்மட்ட பாலம், கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறிய முதலமைச்சர், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்கப்பட்டது உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றி உள்ளதாக பட்டியலிட்டார்.

வெள்ள காலங்களில் நெல் அழிந்து போனதாக கவலை அடைந்த விவசாயிகளுக்கு, ஆயிரத்து 500 கோடி நிவாரணத்தை அதிமுக அரசு அளித்ததாக முதலமைச்சர் தெரிவித்தார்.

தேர்தல் முடிந்து மீண்டும் நமது ஆட்சி அமையுமானால் ஆறு சிலிண்டர் இலவசம், முதியோர் உதவித்தொகை உயர்வு என ஏராளமான திட்டங்களை வழங்கத் தமது தலைமையிலான அரசு தயாராக உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேலும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments