சென்னை வேளச்சேரி ம.நீ.ம வேட்பாளர் சந்தோஷ் பாபுவிற்கு கொரோனா பாதிப்பு
சென்னை வேளச்சேரி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான சந்தோஷ் பாபுவிற்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை டுவிட்டர் பதிவின் மூலம் தெரிவித்துள்ள அவர், வேளச்சேரி தொகுதி வாக்காளர்களை நேரடியாக சந்திக்க முடியாத சூழல், தன்னை பெருங்கவலையில் ஆழ்த்தியிருப்பதாகத் கூறியுள்ளார். வீடியோ கான்பரன்சிங் உள்ளிட்ட டிஜிட்டல் நுட்பங்களை பயன்படுத்தி, பரப்புரை மேற்கொள்ள உள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.
Comments