அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்

0 4847

ஆணும் பெண்ணும் சமம் என பெரியார் கண்ட கனவினை பெண்களுக்கான பல்வேறு திட்டங்கள் மூலம் அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

சென்னை மாதவரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வி.மூர்த்தி, திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.குப்பன் ஆகியோருக்கு ஆதரவாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் மேற்கொண்டார்.

திருவொற்றியூரின் பிரசிக்தி பெற்ற வடிவுடையம்மன் ஆலயத்தில் தரிசனம் மேற்கொண்டு தனது முதல் பிரச்சாரத்தை அவர் துவக்கினார். அப்போது பேசிய அவர், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நிச்சயமாக அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று உறுதி அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments