தகுதியில்லா வாகனங்கள் சாலைப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - நிதின் கட்கரி
பழைய வாகனங்களைக் கழிப்பதற்கான கொள்கையை மக்களவையில் அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகப்படுத்தியுள்ளார்.
அப்போது பேசிய அவர், நாட்டில் ஒருகோடி வாகனங்கள் பயன்படுத்தத் தகுதியில்லாதவை என்றும், அவை அதிக அளவில் மாசு வெளியிடுவதாகவும், சாலைப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
வணிகப் பயன்பாட்டு வாகனங்களை 15ஆண்டுகளுக்குப் பிறகும், தனியார் வாகனங்களை 20 ஆண்டுகளுக்குப் பிறகும் தகுதிச் சான்று பெற்றுப் பதிவைப் புதுப்பிக்கா விட்டால் அவற்றின் பதிவு நீக்கப்படும் எனத் தெரிவித்தார்.
குறித்த காலத்தில் வாகனத்தைக் கழித்துவிடுவோருக்கு ஊக்கச் சலுகையாகப் புதிய வாகனம் வாங்கும்போது 5 விழுக்காடு தள்ளுபடி வழங்க வாகனத் தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
Comments