சென்னையில் கடந்த ஒருவாரத்தில் கொரோனா பரவல் வேகம் 2.5 சதவீதம் உயர்வு

0 5079
சென்னையில் கொரோனா தொற்று பரவலானது கடந்த ஒருவாரத்தில் 2.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

சென்னையில் கொரோனா தொற்று பரவலானது கடந்த ஒருவாரத்தில் 2.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக சோழிங்கநல்லூர், பெருங்குடி, தண்டையார் பேட்டை, வளசரவாக்கம் உள்ளிட்ட மண்டலங்களில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் சதவிகிதம் அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 12.8 ஆகவும், பெருங்குடியில் 10.1 சதவீதமாகவும் உள்ளது. குறைந்தபட்சமாக அம்பத்தூரில் 2.3சதவீதமாகவும், அடையாறில் 0.3 சதவீதமாகவும் உள்ளது.

அதேசமயம் மணலி, திருவொற்றியூர், மாதவரம், கோடம்பாக்கம் உள்ளிட்ட மண்டலங்களில் கொரோனா பரவும் வேகம் கணிசமாக குறைந்துள்ளது. ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பரவும் வேகம் குறையவும் இல்லை, அதிகரிக்கவும் இல்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments