கரூர் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க, அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார்
கரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றவுடன் மாட்டு வண்டியில் மணல் அள்ள இருக்கும் தடை அகற்றப்படும், அதிகாரிகள் யாரும் தடுக்க மாட்டார்கள், ஒரு வேளை அதிகாரிகள் தடுத்தால் தனக்கு போன் செய்யலாம் என செந்திபாலாஜி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதிகாரிகளை மிரட்டும் வகையிலும், தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றாமலும் பேசியதாக செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் புகாராளிக்கப்பட்டது.
Comments